Also Watch
Read this

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கத்தார் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் "பி" பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும், தலா 1 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. 17ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தும், 95ஆவது நிமிடத்தில் கத்தாரும் கோல் அடித்தன.

பலம் வாய்ந்த அணி...
2026 உலகக் கோப்பை 2026 FIFA World Cup கால்பந்து போட்டியில் குரூப் பி பிரிவின் பலம் வாய்ந்த சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் கோல் அடித்த கத்தார் அணி 1-1 என்ற கணக்கில் டிராவை பதிவு செய்து, தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் புள்ளியைப் பெற்று சாதனை படைத்தது. அமெரிக்காவின் லெவிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் கத்தார் அணிகள் மோதின.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரீல் எம்போலோவை கத்தார் கோல்கீப்பர் முகமது அபுநாடா ஃபவுல் செய்தார். இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்போலோ 17ஆவது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து சுவிட்சர்லாந்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். விசா பெறுவதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பின் அமெரிக்கா வந்தடைந்த எம்போலோ அடித்த இந்த கோலை சுவிஸ் ரசிகர்கள் கொண்டாடினர்.

நிறைவேறாத கூடுதல் கோல்
இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 1966ஆம் ஆண்டுக்கு பிறகு தனது உலக கோப்பை வரலாற்றிலேயே மிக அதிகமாக 26 முறை கோல் அடித்த சாதனையை தொட முயற்சித்தது. ஆனால், கத்தார் கோல்கீப்பரின் சிறப்பான தடுப்பாட்டத்தாலும், சுவிஸ் வீரர்களின் பினிஷிங் சொதப்பலாலும் அவர்களால் கூடுதல் கோல் அடிக்க முடியவில்லை.

டிரா ஆனது
சுவிட்சர்லாந்தின் வெற்றி நோக்கி நகர்ந்த போது, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அதாவது, 94ஆவது நிமிடத்தில், மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கத்தார் வீரர் பௌலம் கௌகி கொடுத்த அழுத்தத்தால், சுவிஸ் டிபெண்டர் மிரோ முஹெய்ம் பந்தை தவறுதலாக தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள் - ஓன் கோல் தள்ளினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என்று, டிரா ஆனது.

ஆச்சரியம், மகிழ்ச்சி
கடந்த 2022ஆம் ஆண்டு தனது சொந்த நாட்டில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடிய கத்தார் அணி, லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. ஆனால், இந்த முறை பலம் வாய்ந்த சுவிஸ் அணியை டிரா செய்து, உலக கோப்பை வரலாற்றில் தனது முதல் புள்ளியைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்து உள்ளது. கத்தார் அணியின் இந்த ஆட்டம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved