news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ’அன்பு இளவல்’ உதயநிதிக்கு திருமாவளவன் பாராட்டு
tv

Also Watch

’அன்பு இளவல்’ உதயநிதிக்கு திருமாவளவன் பாராட்டு

என்னுடைய அரசியல் ஆசான்...

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசியல் கொள்கை ஆசான் என்று கூறிய உதயநிதிக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில் தான் மனம் திறந்து பேசியதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவில்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட வீடியோ பதிவில், தன்னை 'அரசியல் ஆசான்' என்று சட்டமன்றத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது;
எந்த தயக்கமும் இல்லாமல் மனம் திறந்து, ’திருமாவளவன் என்னுடைய கொள்கை ஆசான்’ என்று உதயநிதி கூறி உள்ளார். இது நமது இயக்கத்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து, நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.


அன்பு இளவல் உதயநிதி
"அன்பு இளவல்" உதயநிதி ஸ்டாலின் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இன்றி, தனது உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில், மிகவும் வெளிப்படையான மனதுடன் 'அரசியல் ஆசான்' என்று சட்டசபையிலேயே அறிவித்து உள்ளார். உதயநிதியின் இந்த எதார்த்தமான பேச்சை சகித்துக்கொள்ள முடியாமல் சிலர் வேண்டுமென்றே எதிர்மறையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பரப்பி வருகின்றனர்.

கட்சியினருக்கு வேண்டுகோள்
சமூக வலைதளங்களில் பரவி வரும் இத்தகைய எதிர்விமர்சனங்களுக்கு விசிக தோழர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் பதில் அளித்து விவாதிக்க வேண்டாம், அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.

சட்டசபையில் உதயநிதி...
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "என்னுடைய அரசியல் ஆசான் என்றால் அது என்றும் திருமாவளவன் தான்" என்று கூறி இருந்தார். இதனை பாராட்டும் விதமாகவே திருமாவளவன் இந்த நெகிழ்ச்சியான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Related Link
இதுவரை பார்த்திடாத சட்டசபை, 2 மணி நேரம் அனல்

இதுவரை பார்த்திடாத சட்டசபை, 2 மணி நேரம் அனல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்முஸ் நீரிணை தடையால் செலவினம் அதிகரிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved