news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஹாலிவுட் தொடரின் தழுவலா தர்மன்?
tv

Also Watch

ஹாலிவுட் தொடரின் தழுவலா தர்மன்?

"ஜெயிலர் -2" ரிலீஸ் எப்போது?

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரஜினிகாந்தின் "ஜெயிலர்-2" திரைப்படம் செப்டம்பர் மாதம் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் "ஓம்" அக்டோபர் 16ல் வெளியீடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர்-2, ஜூன் 12ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சிறப்புத் தோற்றம் மற்றும் பிற மறுபடப்பிடிப்பு நிறைவடையாததால் ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பண்டிகை காலங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, நடிகர் தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான "ஓம்" திரைப்படம் நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு, அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

THE GOOD DOCTOR ஹாலிவுட் தொடரின் தழுவலா தர்மன்?
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் திரைப்படம் 'THE GOOD DOCTOR' என்ற ஹாலிவுட் தொடரின் தழுவல் என தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என படக்குழு தெரிவித்துள்ளது. அந்த செய்தி போலியானது என இயக்குநர் அஷ்வந்த் மாரிமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் தர்மன் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நிவின் பாலி பைக் ரேஸராக மிரட்டலான வேடம்
நிவின் பாலி நடித்துள்ள "விஜயம்" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசர் வெளியாகி உள்ளது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அவர் பைக் ரேஸராக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. படத்தில் நிவின் பாலியுடன் மமிதா பைஜு, ஆர்ஷா சாந்தினி பைஜு, வினய் ஃபோர்ட், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு மிதுன் முகுந்தன் இசை அமைத்துள்ளார். நிவின் பாலியின் 50ஆவது படமான விஜயம், அவருக்கான புது மைல்கல்லாக உருவாகியிருக்கும் நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்
நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படமான "லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி" பூஜைடன் தொடங்கப்பட்டது. கே.ஆர்.செந்தில்நாதன் இயக்கத்தில் ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம்.மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அச்சு ராஜாமணி இசையமைக்க, ஒளிப்பதிவாளராக ஷிஹாப் பட்டாம்பி பணியாற்றுகிறார். காவியா புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்2 மூவிஸ் பேனரில் பி.மஞ்சுநாத் படத்தை தயாரிக்கிறார்.

நடிகர் அஸ்வின் நடிக்கும் "குட் நியூஸ்"
நடிகர் அஸ்வின் நடிக்கும் "குட் நியூஸ்" திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. மூவிட்ரான் புரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் நாகேந்திர முருகன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வகையில், பாசம், நகைச்சுவை, நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகளுடன் உருவாக உள்ளது. படத்தின் முதல் காட்சியை இயக்குநர் விஜய் கிளாப் அடித்து தொடங்கி வைக்க, இயக்குநர் பாலா, கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

Related Link
திரைக்கதை மன்னன் மறைவு, சரிந்தது பேனா, முடிந்தது சகாப்தம்

திரைக்கதை மன்னன் மறைவு, சரிந்தது பேனா, முடிந்தது சகாப்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கீர்த்தனாவை கண்டித்து மக்கள் போராட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved