news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திரைக்கதை மன்னன் மறைவு, சரிந்தது பேனா, முடிந்தது சகாப்தம்
tv

Also Watch

திரைக்கதை மன்னன் மறைவு, சரிந்தது பேனா, முடிந்தது சகாப்தம்

கே.பாக்யராஜ் வாங்கிய விருதுகள்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்த் திரையுலகின் KING OF SCREENPLAY, அதாவது திரைக்கதை மன்னன் என புகழப்படும் பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பல படைப்புகளை கொடுத்த அவர், பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

திரைக்கதை மன்னன்
தமிழ்த் திரையுலகில் தனித்துவமான கதைக்களம், ஜனரஞ்சகமான வசனங்கள் மற்றும் யதார்த்தமான நடிப்பால் ⁠‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் பல விருதுகளை தன்னுடைய திரைக்கதைக்காக பெற்றுள்ளார். இவருடைய Screenplay techniques ரொம்ப different ஆக ரசிக்கும்படியாக இருக்கும். தன்னுடைய ஆஸ்தான குருவான இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், தான் கதாநாயகனாக அறிமுகமான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த வசன எழுத்தாளர் விருதை, 1979ஆம் ஆண்டு வாங்கி உள்ளார்.

அடுத்தடுத்து அலங்கரித்த விருதுகள்
அடுத்து, 1981ஆம் ஆண்டு தான் இயக்கி, நடித்த மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த “ஒரு கை ஓசை” படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை பாக்யராஜ் (Special Prize) வாங்கி உள்ளார்.

1984ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்று உள்ளார்.

அதேபோல 1991ஆம் ஆண்டில், பவுனு பவுனுதான் திரைப்படத்திற்காக சிறந்த கதை எழுத்தாளர் என்ற சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் வாங்கி உள்ளார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்(SIIMA) சார்பாக 2014ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கி பாக்யராஜ் கவுரவிக்கப்பட்டார். அதேபோல, தமிழ் சினிமாவில் Cult Movies உருவாக்கியதற்காக The Greatest Ever Cult Movie Maker என்ற சிறப்பு விருதும் 2026 Behindwoods சார்பில Gold Medal வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத, தங்களின் தனித்துவமான பாணியால் Cult Status திரைப்படங்களை உருவாக்கிய சிறந்த இயக்குநர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த Signature Edition என்ற கௌரவப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

கலைமாமணி பாக்யராஜ்
கலைத்துறையில் கே.பாக்யராஜ் ஆற்றிய பங்களிப்பிற்காக, தமிழ்நாடு அரசு ⁠மாநிலத்தின் உயரிய கலை விருதான கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்தது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய கலை விருதான ⁠கலைமாமணி விருதை கே.பாக்யராஜ் 1984ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று, தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கைகளால் பெற்றுக் கொண்டார்.

எம்ஜிஆரால் தமது கலை உலக வாரிசு என்றும் பாக்யராஜ் அழைக்கப்பட்டவர். தனது திரைப் பயணத்தின் ஆரம்ப காலங்களிலேயே இயக்குநராக அறிமுகமான 5 ஆண்டுகளுக்குள்ளாகவே கலைத்துறைக்கு ஆற்றிய அசாத்திய பங்களிப்பிற்காக இவருக்கு இந்த உயரிய கௌரவம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Link
விடைபெற்றார் திரைக்கதை வித்வான் பாக்யராஜ்

விடைபெற்றார் திரைக்கதை வித்வான் பாக்யராஜ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியர்கள் 300 பேர் மாயமானதை உறுதிபடுத்திய அமைச்சர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved