Also Watch
Read this
சென்னையில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். முகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசாக வழங்கினார்.

குழந்தைகளுக்கு...
இந்தியாவில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்படும் ‘போலியோ’ வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு ஆண்டு தோறும், 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி வருகிறது.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று ஜூன் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

முகாமில் முதல்வர் விஜய்
சென்னை, பாலவாக்கத்தில் உள்ள, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் பங்கேற்ற பொம்மைகளை பரிசாக வழங்கினார்.

52.91 லட்சம் குழந்தைகளுக்கு
தமிழ்நாடு முழுவதும், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இன்று மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறு அரசு சார்பில், பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved