news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட 52 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை இன்று, முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். சென்னை பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம்
இந்​தி​யா​வில், இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிப்​ப​தற்​காக ஆண்​டு​தோறும் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளதால், தற்​போது ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து தரப்படுகிறது. இதன்​படி, இந்த ஆண்​டுக்​கான போலியோ சொட்டு மருந்து வழங்​கும் முகாம் நாடு​முழு​வதும் இன்று ஜூன் 28ஆம் தேதி ஞாயிறன்று நடை​பெறுகிறது.

தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
சென்னை, பால​வாக்​கத்​தில் உள்ள ஆதி திரா​விடர் நல உயர்​நிலைப்​பள்ளி வளாகத்​தில், போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று காலை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க உள்​ளார். தமிழ்நாடு முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுக்கு உட்​பட்ட 52 லட்சத்து 91,000 குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டு உள்​ளது.

எங்கெங்கு முகாம்?
தமிழகத்​தி​லுள்ள
அரசு மருத்​து​வ​மனை​
அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம்
அங்​கன்​வாடி மையம்
சத்​துணவு மையம்
பள்​ளி​கள்
மக்கள் கூடும் முக்​கிய இடங்​கள்
மொத்​தம் 43,051 மையங்​கள்

நடமாடும் குழுக்​களும் தயார்
பேருந்து நிலை​யம்
ரயில் நிலை​யம்
விமான நிலை​யம்
சுங்கச் ​சாவடிகளி​லும் சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.
தொலை​தூர மற்​றும் எளி​தில் செல்ல முடி​யாத பகு​தி​களில் வசிக்​கும் குழந்​தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்​கள் தயார்நிலையில் உள்ளன.
சுகா​தா​ரப் பணி​யாளர், அங்​கன்​வாடி பணி​யாளர், ஆசிரியர்​, தன்​னார்​வலர் உள்ளிட்ட 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் போலியோ சொட்​டுமருந்து வழங்​கும் பணி​யில் ஈடு​பட்டுள்ளனர்.

யார் யாருக்கு?

ஏற்​கெனவே குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தந்து இருந்தாலுர், தேசிய தடுப்​பூசி அட்​ட​வணைப்​படி மீண்​டும் சொட்டு மருந்து வழங்​க வேண்​டும். சமீபத்தில் பிறந்த குழந்​தைகளுக்​கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்​பது அவசி​யம். விடு​பட்ட குழந்​தைகளுக்கு முகாம் முடிந்த பிறகு 29, 30ஆம் தேதி​களில் தற்​காலிக மையங்​களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டு உள்​ளது.

Related Link
கோழிக்கால்கள் சாப்பிடலாமா? நல்லதா கெட்டதா?

கோழிக்கால்கள் சாப்பிடலாமா? நல்லதா கெட்டதா?

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 28062026

0
29 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 28062026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau