news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
tv

Also Watch

இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில், கண்ணன் பிறந்தநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பக்தர்கள், பெருமாள் கோயில்களுக்கு சென்று மனமுருக தரிசனம் செய்தனர்.

கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் களை கட்டியது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு அவதார தினத்தை முன்னிட்டு வீடு, கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

கோவில்களில் அபிஷேகம்
கிருஷ்ணர் மற்றும் வைணவத் தலங்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகளும், மகா அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இல்லங்களில் கோலாகலம்
வீடுகளைச் சுத்தம் செய்து, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் சிறு பிஞ்சுப் பாதங்களை அரிசி மாவால் வரைந்து, கண்ணனைத் தங்கள் இல்லங்களுக்குள் வரவேற்பது போன்ற வழிபாடுகளை பொது மக்கள் மேற்கொண்டனர்.

கிருஷ்ணருக்குப் பிடித்தமான வெண்ணெய், அவல், முறுக்கு, சீடை, அப்பம், லட்டு போன்ற விதவிதமான பலகாரங்களைத் தயாரித்து படையலிட்டு வழிபட்டனர்.

மழலைகளின் கிருஷ்ணர்,ராதா வேடம்
குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்களை அணிவித்து, போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது, தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா களை கட்டியது.


Related Link
இன்றைய ராசிபலன் 04092026

இன்றைய ராசிபலன் 04092026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசன் படம் குறித்து நடிகர் சிம்பு நெகிழ்ச்சி

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved