news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 3 நாளில் ரூ.230 கோடி வசூல் ஈட்டிய டாக்சிக்
tv

Also Watch

3 நாளில் ரூ.230 கோடி வசூல் ஈட்டிய டாக்சிக்

விரைவில் Gladiators ட்ரெய்லர்

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விரைவில் Gladiators ட்ரெய்லர்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான டாக்ஸிக் திரைப்படம், 3 நாள் முடிவில் ரூ.230 கோடியை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

யாஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியான 'டாக்ஸிக்' Toxic: A Fairy Tale for Grown-ups திரைப்படம் தனது 3 நாட்களின் முடிவில் உலகளவில் சுமார் 221.45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் உலகளவில் 150 கோடி வசூலித்து சாதனை படைத்த இப்படம், 2, 3ஆவது நாட்களில் சற்று சரிவைச் சந்தித்தாலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் வருகையால் 250 கோடி ரூபாய் கிளப்பில் மிக விரைவில் இணையும் என கூறப்படுகிறது.

இளையராஜா இசையமைத்து பாடிய பாடலுக்கு...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் 2ஆவது பாடல் ‘முத்துமணி’ வெளியானது. இசைஞானி இளையராஜா இசையமைத்து பாடிய இப்பாடலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த கியூட்டான மெலடி ட்ரான்ஸ் பாடலை இளையராஜாவே எழுதி, பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலில் இடம்பெற்றுள்ள ஆர்க்கெஸ்ட்ரேஷன் மற்றும் ஸ்ட்ரிங் லேயர்கள் இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. 'டோரதி' திரைப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF 2026) திரையிடப்பட்ட பிறகு, வரும் செப்டம்பர் 25ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விரைவில் Gladiators ட்ரெய்லர்
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் Gladiators ஆவணப்பட ட்ரெய்லர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ட்ரெய்லரின் சென்சார் பணிகள் முடிந்ததாக கூறப்படும் நிலையில், அதன் ரன் டைம் 3 நிமிடங்கள் 49 வினாடிகள் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இந்த ட்ரெய்லருக்கு 'UA' சான்றிதழ் வழங்கி உள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'Gladiators – In Pursuit of Challenges' ஆவணப்படம், அஜித் குமாரின் சர்வதேச கார் பந்தயப் போட்டி மற்றும் அவரது ரேசிங் டீம் குறித்த உண்மைக் கதையை விவரிக்கிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

Related Link
‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்

‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை இந்திய அணி வரலாற்று சாதனை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved