news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் வர்த்தகம் பாதிப்பு
tv

Also Watch

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் வர்த்தகம் பாதிப்பு

வரி சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியப் பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிவிதிப்பால், தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பு ஒப்பந்தம் மூலம் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து அவசரமாகவும், கவலையோடும் இதனை எழுதுகிறேன். தமிழ்நாடு, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை ஏற்றுமதியின் அடித்தளமாக விளங்குகிறது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 28 சதவீத அளவிற்கு பங்களிப்பினை வழங்குவதுடன், சுமார் 75 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது. இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணி ஏற்றுமதியிலும் 40 சதவீத அளவிற்கு முக்கியப் பங்காற்றி, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.
அமெரிக்க வரிவிதிப்பினால், தற்போது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடு என்பது வெறும் பொருளாதாரப் பின்னடைவு மட்டுமல்ல, ஈடுசெய்ய முடியாத சமூக இழப்பினை ஏற்படுத்தும் மாபெரும் சவாலாகும்.
இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூரில், உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களில் ஏற்றுமதியாளர்களுக்கு 15,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பும் 30 சதவீதம் வரை கட்டாய உற்பத்தி குறைப்பும் ஏற்பட்டுள்ளது. புதிய ஆர்டர்களும் கவலை அடையும் அளவிற்குக் குறைந்து வருகின்றன.
திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் 60 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால், பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன.
வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், சர்வதேச இறக்குமதியாளர்கள், தங்களது ஆர்டர்களை, வியட்நாம், வங்கதேசம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலுள்ள போட்டியாளர்களிடம், அங்கு வரிவிதிப்பினால் கிடைக்கும் நன்மையைக் கருத்தில் கொண்டு விரைவாக வழங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, சர்வதேச சந்தை வாய்ப்புகளை இழந்து, மீண்டும் வாய்ப்புகளைத் திரும்பப் பெறுவது என்பது பெருத்த சவாலாக இருக்கும். இது நமது இளைஞர்களின், குறிப்பாக பெண்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலான, நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இந்த சூழலில், இந்திய-அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விரைவான தீர்வின் மூலமாக நமது ஏற்றுமதியாளர்களின் வணிக நிலையை மீட்டெடுப்பதோடு, உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்திட இயலும்.
எனவே, நிலையான வர்த்தகத்தை வளர்த்தெடுப்பதற்கும், உள்நாட்டு தொழில் மற்றும் வேலைகளைப் பாதுகாப்பதற்கும் பிரதமர் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் மீது நம்பிக்கையுடன் இருப்பதோடு, அமெரிக்க வரிவிதிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved