Also Watch
Read this

நாதக வேட்பாளர் கார்த்திகாவின் கைதுக்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய், பா.ஜ.க-வின் Carbon Copy ஆக செயல்படாமல் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அரசியல் பழிவாங்கலோடும், த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசை திருப்பவும் கைது நடவடிக்கை என உதயநிதி குற்றம் சாட்டினார்.

திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாதக வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய கனிமொழி, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும் என தெரிவித்தார். சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என நாள்தோறும் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும் என கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்றது என அன்புமணி கண்டனம்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக அதிகாலையில் வந்து அவரையும், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளையும் கைது செய்தது தேவையற்றது என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved