news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 2 நாட்களில் 9 கொ*கள் என உதயநிதி கண்டனம்
tv

Also Watch

2 நாட்களில் 9 கொ*கள் என உதயநிதி கண்டனம்

"என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?"

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பட்டப்பகலில் இரட்டைக் கொ* உட்பட 2 நாட்களில் 9 கொ*கள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கொத்துக் கொத்தாக கொ*கள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற ஆட்சி நடத்தும் Dummy முதலமைச்சர் என்ன செய்கிறார்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பட்டப்பகலில்...
இதுகுறித்து, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
பட்டப்பகலில் இரட்டைக் கொ* உட்பட 2 நாட்களில் 9 கொ*கள், என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்? திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன், தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்களுக்கு பாதுகாப்பில்லை
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொ* செய்துள்ள கொடூரமும் அரங்கேறி உள்ளது.

குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.

உறுதியான நடவடிக்கை
இதுதவிர, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி, தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொ*கள் நடந்து இருக்கின்றன. இப்படி கொத்துக்கொத்தாக கொ*கள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்? இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
தாராபுரம் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சவாலா? ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்

தாராபுரம் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சவாலா? ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்

          


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved