news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
tv

Also Watch

தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

"அடக்குமுறைக்குப் பெயர்தான் மாற்றமா?"

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
"அடக்குமுறைக்குப் பெயர்தான் மாற்றமா?"

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னைக்கு போராட புறப்பட்ட பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை வீட்டுக்காவலில் வைப்பதாக என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராடுவோரை அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர்தான் மாற்றமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

வீட்டுக்காவலில்...
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில்,
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராட இருந்த பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த ஷோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மருத்துவப் பணியாளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த ரீல்ஸ் அரசு, அராஜகம் செய்வது ஏன்?

இது தான் மாற்றமா?
விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?

மருத்துவப்பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டம்மி முதலமைச்சர் முன்வர வேண்டும்.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
மரகதம் குமரவேல், சத்யபாமா பதவி ஏற்பு

மரகதம் குமரவேல், சத்யபாமா பதவி ஏற்பு

           


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மனித மூளையின் ரகசியங்களைத் தேடும் அறிவியல் திட்டம்

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved