news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் என வன்னியரசு புகார்
tv

Also Watch

மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் என வன்னியரசு புகார்

’மன்னிப்பு கேட்க வேண்டும்’

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுக என்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

திமுக அரசைப் போல...
இதுதொடர்பாக, அமைச்சர் வன்னியரசு கூறி இருப்பதாவது;
மாணவர் பாரதிதாசன் கோரிய முழு உதவித்தொகையும் விடுக்கப்பட்டு உள்ளது. முந்தைய திமுக அரசில் எப்படி விளக்கம் கேட்பார்களோ? அதுபோலவே நாங்களும் மாணவரிடம் விளக்கம் கேட்டோம்.

திமுக அரசியல்...
மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை, திமுக தான் அரசியல் செய்கிறது. உண்மையில் திமுகவுக்கு மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தில் 601 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 153 மாணவர்களுக்குத் தான் கொடுத்திருக்கின்றனர். மீதி உள்ள மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றனர்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டது திமுக அரசு தான். அதில் பாதிக்கப்பட்ட ஒரு காவலர் என்னிடம் வந்து புகார் தெரிவித்தார். எங்களுடைய தலைவர் திருமாவளவன், அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் சென்று இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

தலித் மாணவர்கள், இளைஞர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்த அரசு திமுக அரசு. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.

திமுக நாடகம்...
மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக நடந்துகொள்வது ஒரு நாடகம் போலவே தோன்றுகிறது.

எங்களுக்கு கூடுதல் அக்கறை உள்ளது. அந்த பொறுப்புடன் செயல்படுகிறோம். மாணவர் பாரதிதாசனின் பாதுகாப்பு, படிப்புக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.

Related Link
அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம், யார் சொல்வது உண்மை?

அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம், யார் சொல்வது உண்மை?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூக ஊடங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved