Also Watch
Read this
By: Manigandan Raja

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல் விவகாரம் இருதரப்பு உறவுகளையும், உலக எரிசக்தி சந்தையையும் பாதிக்கக்கூடும் என இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்க விமானப்படைக்காக அதி நவீன ஏவுகணை
அமெரிக்க விமானப்படைக்காக அதி நவீன ஏவுகணை தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வான் இலக்குளை தாக்கும் ஏவுகணை ரகசியமாக தயாரிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள அமெரிக்கா ரகசிய ஏவுகணையை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய மசோதாவுக்கு EU வரவேற்பு
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கும் அமெரிக்க செனட் சபையின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி திரும்ப வாய்ப்பு உள்ளதாக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா கருத்து தெரிவித்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved