news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வெற்றியை தீர்மானிக்கிறதே பாமக தான், பம்பரமாய் சுழலும் தவெக, திமுக, அதிமுக
tv

Also Watch

வெற்றியை தீர்மானிக்கிறதே பாமக தான், பம்பரமாய் சுழலும் தவெக, திமுக, அதிமுக

மதுராந்தகம் யாருக்கு? அஜெண்டா எடுபடுமா?

54

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

"யாருக்கும் ஆதரவும் இல்லை, நாங்களும் போட்டியில் இல்லை," என அன்புமணி அறிவித்த நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? என்பதையே தீர்மானிக்கும் இடத்தில் உள்ள பாமகவினரின் வாக்குகளை வாரி அள்ள முக்கிய கட்சிகள் சூறாவளியாக சுழன்று வருகின்றன.

அதிமுகவினர் மீது பாமகவினர் ஏக கடுப்பில் உள்ளதால் அவர்களது வாக்குகள் தவெகவிற்குதான் தாவும் என கள நிலவரம் கூறினாலும், மனம் தளராத இலை தரப்பினர் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இடைத்தேர்தல் பரபரப்பு
மதுராந்தகம் இடைத்தேர்தலில் வாக்குகளை வாரி அள்ள வேண்டும் என்பதற்காக தவெக, திமுக, அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியை பொறுத்தவரை பாமகவிற்கு தான் 15 ஆயிரம் வாக்குகளுக்குமேல் இருப்பதாக கள நிலவரம் சொல்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தனித்து நின்றே 10 சதவீத வாக்குகளை பெற்றது பாமக.

ஆனால், இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, நாங்கள் ரேஸிலும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துவிட்டார். அதனால், பாமகவின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதுதான் 3 கட்சிகளின் முக்கிய அஜெண்டா. அதில், பாமகவின் ஓட்டு யாருக்கு டிரான்ஸ்பர் ஆகப்போகிறது என்பதுதான் கேள்வியே.

தவெகவுக்கு வாய்ப்பு
தொகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விசாரித்தபோது தவெகவிற்கு வாக்குகள் தாவும் என்ற பதில் தான் வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 2021 முதல் 2026 வரை மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் கோரிக்கை வைத்தனர்.

அதற்கென்ன செய்துவிடலாம் என திமுக வாயாலேயே வடை சுட்டுவிட்டதாகவும், அவர்களுக்கு ஓட்டுப்போட வாய்ப்பே இல்லை எனவும் பாமகவினர் கூறுகின்றனர். திமுகவினர் மீதாவது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்ற வருத்தம்தானே தவிர அதிமுகவினருக்கு தங்களின் வாக்குகள் மறந்தும்கூட செல்லாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் மதுராந்தகம் தொகுதி பாமகவினர்.

அதிமுக வாக்குகள் எங்கே?
கூடவே இருந்து குழிபறித்துவிட்டார்கள் என்பதுதான் அதிமுகவினர் மீது பாமகவினருக்கு இருக்கும் முதல் கோபம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் போட்ட உழைப்பில் ஒரு சதவீதத்தைகூட அவர்கள் பதிலுக்கு செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் பாமகவினர்,

சென்னை பெரம்பூரில் முதலமைச்சர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட திலகபாமா வெறும் 8 ஆயிரம் வாக்குகள்தான் பெற்றிருந்தார் எனவும் அதற்கு பின்னால் அதிமுகவினரின் அசட்டுத்தனம் மட்டுமே காரணமாக உள்ளது எனவும் கூறுகின்றனர்.

பெரம்பூரில் பாமகவின் வாக்குகள் பூஜ்ஜியம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், கடந்தகால தேர்தல்களில் அதிமுக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கினார்கள்தானே? அவர்களின் வாக்குகள் எங்கே? அந்த வாக்குகளை வாங்கி இருந்தாலே வெற்றி கிட்டியிருக்கும்தானே என கேள்வி எழுப்புகின்றனர்.

அதிமுக மீது அதிருப்தி
இதுமட்டுமல்லாது, பென்னாகரம், போளூர், மயிலாடுதுறை, திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் கொடுத்த வாக்குறுதியை மறந்து அதிமுக தங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை எனவும் கூறுகின்றனர்.

சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த இடஒதுக்கீட்டு தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை 2021ல் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடைசிநேரத்தில்

அவசரகதியில் சட்டமாக நிறைவேற்றியதாகவும், அதனாலேயே உரிய தரவுகள் மற்றும் சாதிவாரி புள்ளிவிவரங்கள் இல்லையெனக்கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இதன்மூலமும், அதிமுக மீது பாமகவினருக்கு படு அதிருப்தி உள்ளது என்பது புலப்படுகிறது.

யாருக்கு ஆதரவு
மதுராந்தகத்தில் 80 சதவீத வாக்குகள் தவெகவிற்கும், 20 சதவீத வாக்குகள் திமுகவிற்கும் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் மாம்பழத்தின் தயவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அதிமுக, பாமகவினரின் வாக்குகள் மற்றும் பாமக அல்லாத வன்னியர்களின் வாக்குகளையும் திரட்ட தங்கள் முழு பலத்தை காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வன்னியர்களின் செல்வாக்கு உள்ள அச்சரப்பாக்கம் ஒன்றியம், மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள 24 வார்டுகளையும் குறி வைத்துள்ளனர்.

10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை சட்டமாக இயற்றியது நாங்கள்தான், அதனால் வன்னியர்களுக்கான கட்சி அதிமுகதான் எனக்கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.

மதுராந்தகத்தில் யார் வெற்றி என்பதையே தீர்மானிக்கும் இடத்தில் பாமகதான் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அவர்கள் யாருக்கு வெற்றியை பரிசாக கொடுக்கிறார்கள் என்பது இடைத்தேர்தல் முடிந்த 3ஆவது நாளில் தெரிந்துவிடும்.

Related Link

"திமுகவின் கிளை கழகம் அதிமுக" என முதல்வர் விஜய் கடும் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved