news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெக பனையூர் அலுவலகத்தில் தேவருக்கு விஜய் மரியாதை
tv

Also Watch

tv

Read this

தவெக பனையூர் அலுவலகத்தில் தேவருக்கு விஜய் மரியாதை

சமூக வலை தளத்தில் புகழாரம்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், முத்துராமலிங்க தேவர் புகைப்படத்தை வைத்து, அக்கட்சித் தலைவர் விஜய், மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் என பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், அவரது பனையூர் அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‘விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்கள் - தவெக தலைவர் விஜய் மரியாதை | TVK VIjay

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved