Also Watch
Read this
தமிழகமே எதிர்பார்க்கும் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள், பள்ளி கல்வித்துறைக்கான 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகை விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் முன்வைத்தார். பின்னர் அதே விழாவில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் தமிழ்நாட்டுக்கு கிடைக்குமென உறுதி அளித்தார்.

முதல்வர் விஜய் பேசியதாவது;
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் மாநிலம் தமிழ்நாடு. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமாக தமிழ்நாடு உள்ளது.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுகையில் பலன் நேரடியாக பிரதிபலிக்கும்.
சென்னையை தாண்டி வளர்ச்சி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்ல வேண்டும்.

முதலமைச்சர் விஜய் வைத்த கோரிக்கைகள்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவேண்டும்.
கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஒசூர் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவேண்டும். சென்னை - குமரி, சென்னை - கோவை அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

பள்ளிக் கல்வி நிதி ரூ.5,110 கோடியை விடுவிக்கவேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி உறுதி
முதல்வர் விஜய் உடனும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுப்போம். புதிய சிகரத்தை தொடும் தமிழ்நாட்டை படைக்க விரும்புகிறோம். மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அனைத்து கிடைக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி மேடையிலேயே உறுதி அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved