news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜப்பானில் பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு
tv

Also Watch

ஜப்பானில் பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு

சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சி

100

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pm modi

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார். டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் களை கட்டின.

ஜப்பானில் நடைபெறும் 15ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஆகஸ்ட் 31ம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:

டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் எதிர்நோக்குகிறேன். உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர்

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved