news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தாய் கழகத்திற்கு வரவேற்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

தாய் கழகத்திற்கு வரவேற்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ops join dmk

முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வத்தை தாய்க் கழகத்திற்கு வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சகோதரர் ஓ.பன்னீர்செல்வம், அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர், அவரது வரவு நல்வரவாகட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், எனவும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.



திமுகவில் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் இருந்து விலகிய, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிப்ரவரி 27ஆம் தேதி, திமுகவில் இணைந்தார். தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறை.
ஓ.பி.எஸ். உடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

வருக வருக என வரவேற்கிறேன்
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு;
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க் கழகமாம் திமுகவில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர், திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.

நல்வரவாகட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள்.

நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர், அவரது வரவு நல்வரவாகட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Link
இபிஎஸ் சர்வாதிகாரி, ஓபிஎஸ் தாக்கு

இபிஎஸ் சர்வாதிகாரி, ஓபிஎஸ் தாக்கு

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 56 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved