news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சேர்வதற்கான தகுதிகள் என்ன?

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி மகனுமான இன்பநிதியின் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. காரணம், தாத்தா மு.க.ஸ்டாலின் தொடங்கி, அவரது குடும்பத்தினர் பலரும் இங்கிலாந்துக்கு நேரில் சென்று, வாழ்த்து கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இன்பநிதி அப்படி என்ன கோர்ஸ் படித்தார்? அந்த புகழ்பெற்ற இங்கிலாந்து கல்லூரியில் சேர எவ்வளவு செலவாகும்? அங்கு படிக்க தகுதிகள் என்ன?

உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகம்
இங்கிலாந்தின், லீட்ஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் படித்து முடித்துள்ளார் இன்பநிதி. இது விளையாட்டுத் துறைக்கான உலகத் தரம் வாய்ந்த கல்வி வழங்கக் கூடிய பல்கலைக்கழகங்களில் முக்கியமானது.

இந்த யுனிவர்சிட்டி கேம்பஸ்-ல் விளையாட்டுத் துறைக்காகவே சுமார் 45 மில்லியன் பவுண்ட் செலவில், அதாவது இந்திய மதிப்பில், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதிநவீன பிரம்மாண்ட கட்டடம் உள்ளது.

மனப்பாடத்திற்கு இடமில்லை
இந்த பல்கலைக்கழகத்தின் ஸ்பெஷலே, இன்டோர் மற்றும் அவுட்டோர் ரன்னிங் டிராக், வீரர்கள் ஓடும் வேகத்தைக் கணக்கிம் அதிநவீன சென்சார் கொண்ட நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு மேலாண்மைக்கான உலகளாவிய நெட்வொர்க்கிங் தான்.

வெறும் மனப்பாடக் கல்விக்கெல்லாம் இங்கு இடமே இல்லை. விளையாட்டுப் போட்டிகளை உலகத்தரத்தில் எப்படி நடத்துவது? விளையாட்டு வீரர்களை எப்படி உருவாக்குவது? எனும் பிராக்டிகல் மேனேஜ்மென்ட் மட்டுமே பிரதான பாடத்திட்டமாகும்.

கட்டணம் எவ்வளவு?
இங்கிலாந்தில் உள்ள டாப் கல்லூரிகளை ஒப்பிடும்போது இங்கு கட்டணம் நார்மல் தான். இந்திய மதிப்பில் இது பெரிய தொகையாகத் தான் உள்ளது. ஒரு வருடத்திற்கு இந்திய மதிப்பில் தோராயமாக ₹18 முதல் 21 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும். தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவுகளுக்கு இந்திய மதிப்பில் தோராயமாக ₹10 லட்சம், ஆண்டுக்கு செலுத்த வேண்டும். ஒட்டுமொத்தமா பார்த்தால், மூன்று வருட டிகிரி கோர்ஸ் முடிக்க குறைந்தபட்சம் ₹80 லட்சம் முதல் ₹1 கோடி ரூபாய் வரைக்கும் செலவாகும் என்று கூறப்படுகிறது.

மாணவருக்கான தகுதிகள்...
பனிரெண்டாம் வகுப்பு CBSE, ISC இல்லை என்றால் State Board தேர்வில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தை முக்கியப் பாடங்களாக உள்ளடக்கி, குறைந்தபட்சம் 60% மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டும். IELTS தேர்வில் 6.0 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

ஒருவேளை சிபிஎஸ்இ ஆங்கிலத்தில் 70%க்கு மேல் வாங்கி இருந்தால், இந்த தேர்வு தேவையில்லை. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, விளையாட்டுத் துறையில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் முந்தைய சாதனைகளை விளக்கும் 'ஸ்டேட்மென்ட் ஆஃப் பர்போஸ்'(SOP) எனும் ஒரு சுயவிவரக் கடிதம் மிகவும் ஸ்ட்ராங்க் ஆக இருக்கவேண்டும்.

மாணவர்களுக்கான சாய்ஸ்
விளையாட்டுத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்காமல், ஒரு கார்ப்பரேட் மற்றும் உலகளாவிய தொழில்துறையாக மாற்றும் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பது தான் இந்த ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் படிப்பு. எதிர்காலத்தில், விளையாட்டுத் துறையில் புதிய புரட்சியை உருவாக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் மிகவும் சரியான சாய்ஸாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Link
சீரழியும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை? தீராத துணைவேந்தர் நியமன பஞ்சாயத்து

சீரழியும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை? தீராத துணைவேந்தர் நியமன பஞ்சாயத்து

     



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாக்கை மடித்து செய்தியாளர்களிடம் அத்துமீறிய தூத்துக்குடி ADSP

3
10 hrs 31 mins agoshare
TUT ADSPbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau