news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியீடு என்ன சொல்கிறது?
tv

Also Watch

tv

Read this

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை வெளியீடு என்ன சொல்கிறது?

வட்டி மட்டும் ரூ.67,000 கோடி

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக ஆட்சியில் கஜானாவை துடைத்துவிட்டு சென்றதால், நிதி நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாக முதலமைச்சர் விஜய் கூறியதன் எதிரொலி.
இன்று ஜூன் 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரிய வில்சன்..


* வெளியானது வெள்ளை அறிக்கை

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்

* வரலாறு காணாத வீழ்ச்சி

மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது
தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது

* தனிநபர் மீதான கடன்
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதன் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு

* வட்டி மட்டும் ரூ.67,000 கோடி
தமிழ்நாடு ஒரு ஆண்டுக்கு வட்டியாக ரூ.67,000 கோடி கட்டுகிறது
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வட்டி அளவு 61 சதவீதம் உயர்ந்துள்ளது

* வருவாய் பற்றாக்குறை உயர்வு
வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு
2021-22ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை - ரூ.46,538 கோடி
2025 - 26ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை - ரூ.78,324 கோடியாக உயர்வு
மத்திய சராசரிக்கும் கீழே தமிழகத்தின் சொந்த வரி வருவாய் சரிந்துள்ளது
வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட அதிக அளவில் உயர்ந்துள்ளது.

"தமிழ்நாடு சராசாிக்கும் கீழ் சாிந்துள்ளது"
இந்தியாவில் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சராசாிக்கும் கீழே சாிந்துள்ளது

* உள்நாட்டு உற்பத்தி குறைவு
மாநில உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 2.2 சதவீதமாக குறைந்துள்ளது; குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிராவை விட தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைவு
முதலீடு செய்வதற்கு இல்லாமல் அன்றாட தேவைகளுக்கே கடன் வாங்கியுள்ளது திமுக அரசு

* கனிமவளத்துறையில் ஊழல், வருவாய் இழப்பு
கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது
கனிமவளத்துறையில் உள்ள கசிவுகளை அடைத்தால் வருவாயை பெருக்க முடியும்; ஓட்டைகளை வைத்து கொண்டு வரியை விதிப்பதால் எந்த பயனும் இல்லை

* ரூ.13.18 லட்சம் கோடி கடன்
தமிழ்நாட்டின் தற்போதைய கடன் ரூ.13.18 லட்சம் கோடி
முத்திரைத்தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட மிக குறைவாக உள்ளது
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் 64.4% தவிர்க்கமுடியாத செலவு

இவ்வாறு நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்து உள்ளார்.

Related Link
பயிர்க்கடன் 100 சதவீதம் ரத்து - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

பயிர்க்கடன் 100 சதவீதம் ரத்து - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 54 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau