Also Watch
Read this
விஜயபாஸ்கர் ராஜினாமா
அதிருப்தியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் இன்று தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக அதிருப்தி அணியில் இருந்து இபிஎஸ் உடன் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் தராமல், அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியதால் அதிருப்தி அடைந்து, இந்த முடிவை எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
அதிமுகவில் இருந்தும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விலகி தவெகவில் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 எம்எல்ஏக்களை தொடர்ந்து...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக, சபாநாயகரிடம் கைப்பட எழுதிய கடிதம் அளித்துள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் வியாழக்கிழமை தவெகவில் இணைவதாக கூறப்படுகிறது.

அமைச்சராக...
எம்.ஆர்.விஜயபாஸ்கர் (M.R.Vijayabhaskar) எம்ஆர்வி என்றும் அழைக்கப்படுபவர். இவர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து, அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2016 மே மாதம் விஜயபாஸ்கரை போக்குவரத்துத் துறை அமைச்சராக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். கரூரில், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் செந்தில்பாலாஜியிடம் 12,448 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார். தற்போது, அதிமுகவில் இருந்து விலகியதோடு, எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.