Also Watch
Read this
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 21 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி சிவகாசியிலும், விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம் மயிலத்திலும், போளூரில் போட்டியிட்ட அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலசபாக்கத்திலும் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

மீண்டும் எடப்பாடியில் இபிஎஸ்
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும், இபிஎஸ் களம் காண்கிறார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் பட்டியலின்படி, 23 வேட்பாளர்களில் 16 பேர், சிட்டிங் எம்எல்ஏ.க்கள், இதில் சி.வி.சண்முகம் எம்.பி. ஆக உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக தக்க வைத்து உள்ளது. திருப்பரங்குன்றத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று, பாஜக தீவிரம் காட்டிய நிலையில் அதிமுகவே இந்த தொகுதியை தக்க வைத்து விட்டது. மதுரை மேற்கு செல்லூர் ராஜூவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

தொகுதி பங்கீட்டு விவரம்
சென்னை ராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் டி.ஜெயக்குமார் 8ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். இதுவரை, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக-வுக்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved