உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெற்றிப் பெற்றார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், 10 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 11ஆவது சுற்றில் அபாரமாக செயல்பட்ட குகேஷ் வெற்றி பெற்றார்.