news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news WWE வீரர் உயிரிழப்பு, ரசிகர்கள் அதிர்ச்சி
tv

Also Watch

WWE வீரர் உயிரிழப்பு, ரசிகர்கள் அதிர்ச்சி

விளையாடி முடித்த சில மணி நேரங்களிலேயே...

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
WWE வீரர் உயிரிழப்பு, ரசிகர்கள் அதிர்ச்சி

WWE மல்யுத்தத்தில் பெக் என அழைக்கப்படும் பிரபல வீரர் பெஞ்சமின் சடர்லி உயிரிழந்தார். அவருக்கு வயது 40.

மல்யுத்த போட்டியில்...
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற, பெக் திடீரென மரணமடைந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'ஆல் அவுட்' என்ற முக்கிய மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று விளையாடிய அடுத்த நாளே, செப்டம்பர் 27ஆம் தேதி அவர் திடீரென உயிரிழந்தார்.

உயிரிழப்பிற்கு காரணம்
சிகாகோவின் டெஸ் ப்ளைன்ஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் வாகன நிறுத்தத்தில், வாடகை கார் ஒன்றிற்குள் அவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்கிடமான பின்னணியோ அல்லது சதியோ இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துல்லியமான மரணத்திற்கான காரணம் மருத்துவப் பரிசோதனைகளின் முழு முடிவுகளுக்குப் பிறகே தெரியவரும்.

தனித்துவ சாதனை
இங்கிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், காற்றில் பறந்து செய்யும் அசாத்திய சாகச மல்யுத்த உத்திகளால் 'The Man That Gravity Forgot', அதாவது, ’புவிஈர்ப்பு விசையாலேயே மறக்கப்பட்ட மனிதன்’ என்ற புனைப்பெயருடன் உலகப் புகழ்பெற்றார். WWEல் Cruiserweight சாம்பியனாகவும், AEWல் International மற்றும் Trios சாம்பியனாகவும் பல பட்டங்களை வென்றவர்.

ரசிகர்கள் அதிர்ச்சி
அவர் ரிங்கில் விளையாடி முடித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் துயரச் செய்தி வெளியானது, உலகெங்கிலும் உள்ள மல்யுத்த ரசிகர்களுக்கும் சக வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மல்யுத்த அரங்கில் இவர் 'பெக்' PAC என்றும், WWE தொடரில் 'நெவில்' Neville, மற்றும் 'ஆட்ரியன் நெவில்' Adrian Neville என்றும் மல்யுத்த ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவராவார்.

Related Link
ஆசிய விளையாட்டின் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டின் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved