Also Watch
Read this
By: Manigandan Raja

வெற்றி திட்டங்கள் என ஸ்டிக்கர்களை ஒட்டி இந்த அரசு மீண்டும் பழைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது பள்ளி கல்வித்துறைகளுக்கு நிதி பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்களே அது பெயர் மாற்றம் தானா?
அம்மாவின் பசுமை இல்ல திட்டம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெற்றி இல்ல வீடு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது அம்மா ஆட்சியில் மேல் பிழையில்லா மிதிவண்டிகள் திட்டம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நவீன பிராண்டட் மிதிவண்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது அம்மா மற்றும் எடப்பாடியார் ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெற்றி மடிக்கணினி திட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் நிர்மல்குமார் :
எந்த திட்டங்களும் நிறுத்தப்படவில்லை முதல்வர் ஆட்சிக்குப்பின் அத்திட்டங்கள் புது செயல் வடிவம் பெற்றுள்ளது ஸ்டிக்கர் ஆட்சி யார் மூலம் உருவானது? என்று அனைவருக்கும் தெரியும் அதை பயன்படுத்த வேண்டாம் என்று பார்க்கிறேன்.
பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
திமுக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள நல்ல திட்டங்களை வரவேற்று, அதனை அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சரியாக செயல்பாட்டில் இல்லாத அம்மா உணவகத்தை, பெயர் மாற்றம் செய்யாமல் அம்மாவின் பெயரிலேயே திட்டத்திற்கு நிதிகளை ஒதுக்கி, அத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

இது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கே தெரியும். அம்மா உணவகம் எங்கள் முதல்வர் ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கே.என்.நேரு
அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு திமுக ஆட்சியில், முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு அந்த உணவகம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. அம்மா உணவகத்தில் அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் திமுக ஆட்சியில் நீக்கப்படவில்லை.

அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.. அங்கு பணியாற்றுபவர்கள் அனைவருமே தற்காலிக பணியாளர்களாக இருந்தார்கள். அதே பணியாளர்கள் வைத்து அதே போல் தான் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சரும் அம்மா உணவகத்தை அதே போல் தான் நடத்த வேண்டும் என்று கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அம்மா உணவகத்தை பார்த்து மற்ற மாநிலங்களும் திட்டம் செயல்படுத்தப்பட்டது திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை. அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு 100 கோடி நிதி ஒதுக்கியது.

ஆதவ் அர்ஜுனா
உண்மை மக்களுக்கு வழங்குவதாக தெரியும் கடந்த ஆட்சியில் அம்மா உணவகம் பெயர் அளவில் தான் இருந்தது. நடைபெற்றது என்பது தற்பொழுதைய ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இது அதிமுக உறுப்பினர்களுக்கு தெரியும்...
கே.என்.நேரு
செலவு செய்யவில்லை என்று சொல்வது தவறு. சரியாக செயல்பட்டு அம்மா உணவகத்தை மேன்மைபடுத்தப்பட்டது. இதை வரவேற்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி
ஆட்சி அமையும் பொழுது ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள் ஆட்சி மாற்றம் வரும் பொழுது அதே பெயரில் அந்த திட்டம் செயல்பட்டால் நல்லது. அதே பெயர் தொடர்ந்தால் இந்த பிரச்சனையே வராது.

அமைச்சர் செங்கோட்டையன்
திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலும் பெயர்கள் மாற்றப்பட்டது.பெயர் மாற்றப்பட்டது உண்மை.அதை மறுக்க முடியாது.இங்கு பல பேர் அதே பெயர் தொடர வேண்டுமென சொல்கிறார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved