Also Watch
Read this
பொதுப்பணித்துறையோட அதிகாரி ஒருத்தரே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்னும் பி.ஏ.வா நீடிக்குறது உதயநிதி வரைக்கும் புகாரப் போயிருக்கற நிலையில அந்த புகார் மேல தவெக அரசு நடவடிக்கை எடுக்காததும் பல கேள்விகள எழுப்பியிருக்கு.

பொதுப்பணித்துறையில அதிகாரியா இருக்கற அருண், திருச்சியில வேலை பார்க்குறாரு, கூடவே இன்னும் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோட உதவியாளரா தொடர்ந்துக்கிட்டிருக்காரு. உதயநிதி கைதுக்கு எதிரான திமுக போராட்டத்துலயே அந்த அருண் பங்கெடுத்த நிலையில, அன்பில் மகேஷோட சேர்த்து அவரையும் தடுப்புக் காவல்ல வெச்சாங்க.

ரெண்டு நாளைக்கு முன்னால திருச்சிக்கு வந்த உதயநிதிகிட்ட, ஒரு திமுக நிர்வாகி அருணைப்பத்தி கம்ப்ளெண்ட் செஞ்சு, அவர முதல்ல பொறுப்புல இருந்து தூக்குங்க, அவரு இருக்கற வரைக்கும் திருச்சியில கட்சிக்காரனுக்கு மரியாதை இருக்காதுன்னு புகார் சொல்லியிருக்காரு. இன்னொரு பக்கம் அரசும் அருண் மேல இன்னும் நடவடிக்கை எடுக்காத நிலையில, தன்னோட அரசு வேலைக்கு வி.ஆர்.எஸ். கொடுத்திருக்காராம் அருண்.

வெளிப்படையா ஒரு திமுக நிர்வாகியாவே செயல்பட்டுக்கிட்டிருக்கற அருண் திருச்சியில கட்டப்பட்டுக்கிட்டிருக்கற ஒரு பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலுக்கு ஃபைனான்ஸும் செஞ்சுக்கிட்டிருக்கறதா சொல்றாங்க.

அருணைப் பத்துன இவ்வளவு விஷயங்கள் வெளிப்படையா திருச்சியில பேசுபொருளாகியிருக்கற நிலையில பொதுப்பணித்துறை அவர் மேல நடவடிக்கை எடுக்காம் வேடிக்கை பார்க்குறது ஏன்ங்கறதுதான் மில்லியன் டாலர் கேள்வியா இருக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved