Also Watch
Read this
தமிழகத்தில் இருந்து கைலாய யாத்திரை சென்று சிக்கிய 150 பேரும் பாதுகாப்பாக, காத்மாண்டு வந்தடைந்ததாக ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சீன அதிகாரிகள் உதவியுடன்...
ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்குக்கு இடையே தானும் தன்னுடன் வந்த 148 தமிழர்களும் பத்திரமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

திருக்கைலாச யாத்திரைக்காகத் ஆன்மீக குழுவினருடன் நேபாளம் சென்றிருந்த அவர், அங்கு திடீரென ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் காத்மாண்டுவிற்குத் திரும்பும் வழியில் சாகா (Saga) என்ற இடத்தில் தற்காலிகமாகச் சிக்கிக் கொண்டார்.

வீடியோ தகவல்
இந்தச் சூழ்நிலையில், தேசமங்கையர்கரசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
’தமிழகத்தில் இருந்து சென்ற ஆன்மீகக் குழுவைச் சேர்ந்த 148 தமிழர்களும் எவ்வித பாதிப்பும் இன்றி முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். தொடக்கத்தில் சாகா பகுதியில் தவித்தவர்கள், தற்போது பாதுகாப்பான முறையில் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவை வந்தடைந்துள்ளனர்.

தமிழகம் திரும்ப...
நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக தமிழகம் திரும்புவதற்கான அடுத்தகட்ட வழிகள் குறித்து நேபாளம், இந்தியா மற்றும் சீன அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாக அவர் தெரிவித்து உள்ளார். நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிப் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வீடியோ யாத்திரிகர்களின் குடும்பத்தினருக்கு நிம்மதியை தந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved