Also Watch
Read this
By: Manigandan Raja

உடற்தகுதி, செயல்திறனே அளவுகோலாக இருக்கும்
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் வீரர்கள் தேர்வுக்கு உடற்தகுதி மற்றும் செயல்திறனே அளவுகோலாக இருக்கும் என்றும் வயது தடையாக இருக்காது எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 40 வயதை நெருங்கி வருவதால் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.
கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி - இலங்கை அணி ஆறுதல் வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 168 ரன்களை எடுத்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணி 17.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2க்கு 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.
டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் சாட் லேகாக் உலக சாதனை

T-20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளும் ஒரே ஓவரில் 5 விக்கெட்டையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் ((Chad Laycock)) படைத்தார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உள்ளூர் தர போட்டியான 'CSA Pro20 Cup 2026/27' தொடரில் KZN Inland அணிக்காக ஆடிய சாட் லேகாக், Titans அணிக்கு எதிராக இச்சாதனையை நிகழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved