இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா புகழாரம்
அபிஷேக் சர்மாவின் பெயர் நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மாதிரியான திறமை அபிஷேக் சர்மாவுக்கு உள்ளது என்றார்.
எதிரணியின் பலம் அறிந்து அதற்கேற்றவாறு பேட்டிங் செய்வதாக கூறினார்.
4-வது டி20 போட்டி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் டி20 தொடர் 2-க்கு 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
மீண்டும் ஐதரபாத் அணிக்கு திரும்பும் தமிழக வீரர் நடராஜன்
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஜீஷன் அன்சாரியையும்((Zeeshan Ansari )), டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனையும்டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்ள இரு அணி நிர்வாகமும் முடிவு செய்துள்ளன.
2027 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் நடராஜன் 5 கோடி ரூபாய்க்கும், டெல்லி அணியில் ஜீஷன் அன்சாரி 40 லட்ச ரூபாய்க்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.