news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த அருமைநாயகம் தேர்வு
tv

Also Watch

வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த அருமைநாயகம் தேர்வு

அர்ஜுனா விருதுக்கு தேர்வு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அருமைநாயகம்

கால்பந்து விளையாட்டில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அர்ஜூனா விருது

கால்பந்து விளையாட்டில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரர் அருமை நாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக்குழு பரிந்துரையின் படி மத்திய விளையாட்டு அமைச்சகம் விருதுகளை அறிவித்துள்ளது. தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், செஸ் சாம்பியன்கள் விதித் குஜராத்தி, திவ்யா தேஷ்முக் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனைகள் காயத்ரி கோபிசந்த், த்ரீசா ஜாலி உட்பட 17 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் விலகியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ((ஆகஸ்ட் 19)) தொடங்கும் நிலையில், பயிற்சி ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால், முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், அவர் விளையாடமாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய 3x3 கூடைப்பந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகம்

இந்தியாவில் "குவெஸ்ட் இந்தியா 2026" ((Quest India 2026)) என்ற பெயரில் புதிய 3x3 கூடைப்பந்து முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற விளையாட்டை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான முதல் படியாக, டெரோ என்டர்டெயின்மென்ட் பப்ளிக் கோ. லிமிடெட் இந்த புதிய கூடைப்பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு ((BFI)) ஆதரவளித்துள்ளதுடன் FIBA-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய 5 பேர் கொண்ட கூடைப்பந்து ஆட்டத்தைப் போல அல்லாமல், 3x3 ஆட்டமானது, வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும், அல்லது ஒரு அணி 21 புள்ளிகளை எட்டியவுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

Related Link
இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் அபார வெற்றி

இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் அபார வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19082026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved