news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் அபார வெற்றி
tv

Also Watch

இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் அபார வெற்றி

சோபியா நோபி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிவி சிந்து

அயர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்

30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெற்றிபெற்றார். டெல்லி இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய போட்டி வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டி இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அயர்லாந்து நாட்டின் சோபியா நோபிளை எதிர்கொண்டார். இந்த பரபரப்பான ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-க்கு 7, 21-க்கு 11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அறிமுக போட்டியிலேயே இந்திய வீரர் அசத்தல்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி அறிமுக போட்டியிலேயே அசத்தல் வெற்றி பெற்றார். டெல்லி இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், ஆயுஷ் ஷெட்டி உலகின் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனான சீனாவின் ஷி யூகியை எதிர்கொண்டார்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் 21-க்கு 14, 13-க்கு 21, 21-க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தனது உலக சாம்பியன்ஷிப் அறிமுக போட்டியிலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார் அயுஷ் ஷெட்டி.

Related Link
அமெரிக்க வீரருடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

அமெரிக்க வீரருடன் டிரா செய்த பிரக்ஞானந்தா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுலுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved