Also Watch
Read this
By: Manigandan Raja

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு :
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோரை டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்ள இரு அணி நிர்வாகமும் திட்டமிட்டுள்ளன. டிரேடிங் முறையில் சூர்யகுமார் யாதவை வாங்கி, அவரை கேப்டனாக நியமிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
கோலியை ஆர்சிபி கேப்டனாக்க முயற்சித்த அணி நிர்வாகம் :

2027 ஐபிஎல் தொடருக்கு விராட் கோலியை கேப்டனாக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் முயற்சித்து வந்த நிலையில், அதற்கு கோலி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துவது மற்றும் சீனியர் வீரராக சக வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதையே கோலி விரும்புவதாக தெரிகிறது.
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து மகளிர் அணி :
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved