Also Watch
Read this
By: Manigandan Raja

2-0 என்கிற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது :
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் "குரூப் பி" பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-க்கு 0 என்கிற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை. 2-வது பாதி தொடங்கியதும் சுவிட்சர்லாந்து அணி கோல் அடிக்க 1-க்கு 0 என முன்னிலை பெற்றது. 57-வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க 2-க்கு 0 என வெற்றிபெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர்: போஸ்னியா வெற்றி :

(Coutesy: FIFA)
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் "குரூப் பி" ஆட்டத்தில், கத்தாரை 3-க்கு 1 என்கிற கோல் கணக்கில் போஸ்னியா அணி வீழ்த்தியது. இதனால் கத்தார் அணி தொடரில் இருந்து வெளியேற்றியது. மேலும், இந்த வெற்றியின் மூலம், தங்கள் பிரிவில் 3-ம் இடத்தை பிடித்த போஸ்னியா இந்த தொடரில் "ரவுண்ட் ஆஃப் 32" சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கொலம்பியா அசத்தல் :

(Coutesy: FIFA)
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் அசத்திய கொலம்பியா அணி 1-க்கு 0 என்கிற கோல் கணக்கில் காங்கோ அணியை வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய கொலம்பியா அணி, தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.