Also Watch
Read this
By: Manigandan Raja

உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளது
செஸ் ஒலிம்பியாட் 10-வது சுற்றில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அணியில் குகேஷ், நிஹால் சரின், பிரக்ஞானந்தா ஆகியோர் வெற்றிபெற்ற நிலையில், அர்ஜூன் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்தது.
முடிவில் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் சீனாவுக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்ததால் இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.
"சோழா கிங்ஸ் தமிழ்நாடு" அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி
இந்தியன் சாஃப்ட்பால் கிரிக்கெட் லீக் சீசன் - 2 போட்டிகளில் களமிறங்கும் "சோழா கிங்ஸ் தமிழ்நாடு" அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி அறிமுக விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமனின் பேரன் ஸ்ரீதர் ராமஸ்வாமி பங்கேற்ற நிகழ்ச்சியில், பிரபல நடிகை அம்ரிதா அய்யர் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved