Also Watch
Read this
By: Web Team

சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கால்பந்து நட்சத்திர வீரர் மெஸ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமஸ்தே இந்தியா. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா என இந்த பயணம் அற்புதமாக அமைந்தது என்றும், சுற்றுப் பயணம் முழுவதும் கொடுத்த அன்பான வரவேற்புக்கும், சிறப்பான விருந்தோம்பலுக்கும், அன்பின் வெளிப்பாட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் கால்பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved