Also Watch
Read this
By: Manigandan Raja

இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் நம்பிக்கையான வீரர்
இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் எப்படியோ அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் நம்பிக்கையான வீரர் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே புகழாரம் சூட்டினார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுகின்றனர் என்றும், ஆனால் ரூட் பொறுமையாக இன்னிங்ஸை கட்டமைத்து நேரம் எடுத்துக் கொண்டு சிறப்பாக சேஸிங் செய்கிறார் என்றார். இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்களை குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு ரூட் முக்கிய காரணமாக அமைந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த சர் கார்பீல்டு சோபர்ஸ், தனது 89 வயதில் காலமானார். இவர் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1974 ஏப்ரல் மாதம் வரை சுமார் 20 ஆண்டுகள் தனது தேசிய அணிக்காக விளையாடியுள்ளார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சர் கார்பீல்டு சோபர்ஸ் 8,032 ரன்கள் அடித்துள்ளார். இதில் 26 சதங்கள் 30 அரைசதங்கள் அடங்கும்.
காயம் காரணமாக இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved