news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews குளோபல் செஸ் லீக் போட்டி: இந்திய அணி தோல்வி
tv

Also Watch

குளோபல் செஸ் லீக் போட்டி: இந்திய அணி தோல்வி

பெங்களூரு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குளோபல் செஸ் லீக்

விஸ்நாதன் ஆனந்த் தலைமையிலான அணி தோல்வி

குளோபல் செஸ் லீக் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான அணி தோல்வியை தழுவியது. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான அலாஸ்கன் நைட்ஸ் அணி 6-க்கு 11 என்ற கணக்கில் திரிவேணி கான்டினென்டல் கிங்சிடம் தோல்வியை தழுவியது. மற்றொரு ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சன் தலைமையிலான நடப்பு சாம்பியனான அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ் அணி 15-க்கு 3 என்ற கணக்கில் அமெரிக்கன் கேம்பிட்சை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

ஐ.சி.சி வெளியிட்ட டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை

ஐ.சி.சி வெளியிட்ட டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 2 இடங்கள் முன்னேறியுள்ளார். 8-வது இடத்தில் இருந்த அவர் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்து வீசிய அவர், 3 போட்டிகளில் 8 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் மூலம், ஐசிசி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரீசரணி முதல் இடத்தில் தொடர்கிறார். அதேபோல, டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 5-வது இடத்திலும், ஷெபாலி வர்மா 7-வது இடத்திலும் உள்ளனர்.

துலீப் டிராபி இறுதிப்போட்டி: தெற்கு மண்டலம் திணறல்

துலீப் டிராபி இறுதிப்போட்டியின் 3வது நாளில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்களும், குமார் குஷாக்ரா 101 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய தெற்கு மண்டல அணியில், தேவ்தத் படிக்கலை தவிர மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. படிக்கல் அரைசதம் கடந்து வெளியேறிய நிலையில், கேப்டன் திலக் வர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

Related Link
ஜப்பான் அணிக்கு எதிராக டி20-யில் விளையாடும் இந்தியா

ஜப்பான் அணிக்கு எதிராக டி20-யில் விளையாடும் இந்தியா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடிக்கணக்கில் Scam, கதறும் 8,500 குடும்பங்கள்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved