Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய அணிக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையில் 5வது இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய மகளிர் ஹாக்கிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் பெண்கள் பிரிவு
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் பெண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் நெதர்லாந்து அணி, பெல்ஜியம் அணியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்த இரு அணிகளும் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
ஹாக்கி உலகக்கோப்பை-8வது இடத்தை பிடித்த இந்தியா
ஹாக்கி உலகக்கோப்பையில் இந்திய அணி 8 வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட்அவுட் நடத்தப்பட்டது.

அதில் பெல்ஜியம் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை 8-வது இடத்தில் நிறைவு செய்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved