Also Watch
Read this
By: Manigandan Raja

இஷிகா, சலிமா டெட்டே கோல்களால் இந்தியா வெற்றி
ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி அரையிறுதியில் தென் கொரியாவை 2-க்கு0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் இஷிகா முதல் கோலை அடித்தார்.
கடைசி கால்பகுதியில் கேப்டன் சலிமா டெட்டே அசத்தலாக கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இறுதிப்போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.
ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியல்
ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த விராட் கோலி, 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் குவித்தார் இந்த சதத்தின் மூலம் அவர் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் ஷுப்மன் கில், 3-வது இடத்தில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல், 4-வது இடத்தில் ரோகித் சர்மா, 5-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் இப்ரஹிம் ஸர்தான் ஆகியோர் உள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 2-க்கு 0 என வென்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 405 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணியின் ஜான் கேம்ப்பெல், கேப்டன் ஷாய் ஹோப், அமிர் ஜாங்கூ ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

406 ரன் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா சதமடிக்க, கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடிக்க, 43.3 ஓவரில் வெறும் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஒருநாள் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ரன் சேசிங் இதுதான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved