Also Watch
Read this
By: Manigandan Raja

ஹங்கேரியில் நடைபெறும் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ்
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் வேலவன், வீர் சோட்ரானி ஆகியோர் முன்னேறியுள்ளனர். ஹங்கேரியில் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஜெர்மனியின் ரபேல் காண்ட்ரா ஆகியோர் மோதினர்.
இதில் வேலவன் 3-க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, போர்ச்சுகலின் ரூன் சோரஸ் ஆகியோர் மோதினர். இதில் சோட்ரானி 3-க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்று
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்து வெளியேறினார். நியூயார்க்கில் வரும் 30-ம் தேதி போட்டிகள் தொடங்கும் நிலையில், தற்போது தகுதிச்சுற்றில் இதில், சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் வீரர் 6-க்கு 3, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - பெலாரசின் அரினா சபலென்கா ஜோடி, செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா- இங்கிலாந்தின் ஹென்றி பேட்டன் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டி
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டி காலிறுதியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஜப்பானில் செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு சீசனில் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.

இதில், இந்திய அணிகள் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்குகின்றன. பெண்கள் பிரிவில் இந்தியா, வங்கதேசம், சீனா, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஜப்பான் என 8 அணிகள் நேரடியாக காலிறுதியில் விளையாடுகின்றன. பெண்கள் இறுதிப்போட்டி செப்டம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved