news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
tv

Also Watch

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ரோகித் சர்மா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West indies

ஒருநாள் போட்டி தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாக அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றனர். மேலும், ருதுராஜ் கெய்க்வர்டுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்கிறது.

இதற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக சுப்மன் கில் தொடர்ந்து நீடிக்கிறார். துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, டி 20 போட்டிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நீடிக்கிறார்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.

கேப்டன் ஹாரி புரூக் 49 பந்துகளில் 114 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சர்வதேச டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சர்வதேச டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா ஒரு இடம் முன்னேறி 862 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷான் 913 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் நீடித்து வருகிறார்.

அதேசமயம், திலக் வர்மா ஒரு இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார். பும்ரா 17-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறினார்.

Related Link
டி20 தொடரையும் 2-0 என வென்று இந்திய அணி அபாரம்

டி20 தொடரையும் 2-0 என வென்று இந்திய அணி அபாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மந்தனாவின் சாதனையை சமன் செய்த லாரா வோல்வார்ட்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved