news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி
tv

Also Watch

தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி

வேல்ஸ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gill

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் போட்டி 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி வேல்ஸ் -ல் இன்று நடைபெறுகிறது. கேப்டன் கில்லின் அபார ஆட்டத்தால் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி மும்முரம் காட்டி வருகிறது. முதல் போட்டியில் சொதப்பிய ரோகித், கோலி ஆகியோர் இந்த போட்டியில் ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல் வெளியீடு 

ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் 12 ஆம் இடத்தில் இருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் 12ஆம் இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தை பிடித்துள்ளார். டாப் 10 ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் உள்ள ஒரே இந்திய வீரர் அக்சர் படேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் அக்சர் படேல் 52 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்((sitsipas)) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெருவின் இக்னசியோ பியூஸ்-ஐ((Ignacio Buse)) எதிர்கொண்ட சிட்சிபாஸ், 6க்கு 4 மற்றும் 6க்கு 4 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினாவின் ஜீவான் மேனுவல் செக் குடியரசின் செனக் கோலரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Link
சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோகித், கோலி

சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோகித், கோலி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved