ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-க்கு 0 என கைப்பற்றியது.
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே பெண்கள் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8.5 ஓவரில் வெறும் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஷபாலி வர்மா 55 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 47 ரன்களும் விளாசினர்.
வூகான் ஓபன் டென்னிஸ் தொடர்: போலந்து வீராங்கனை அபாரம்
வூகான் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை மஜா சுவாலின்ஸ்கா தனது முதல் டபிள்யூ.டி.ஏ. பட்டத்தை வென்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரிட்டன் வீராங்கனை சோனே கார்டாலுடன் மோதினார்.
முதல் செட்டை சோனே கார்டால் 6–க்கு 2 என கைப்பற்ற, பதிலடி கொடுத்த சுவாலின்ஸ்கா, 2-வது செட்டை 6–க்கு 4 என வென்று ஆட்டத்தை சமன் செய்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6–க்கு 2 என்ற கணக்கில் வென்றார்.