Also Watch
Read this
By: Manigandan Raja

மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்
மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 10, 11-ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெற உள்ளது.
கால்பந்து அணி கேப்டன் ரௌடிகளால் அடித்துக் கொலை
உகாண்டா கால்பந்து அணியின் கேப்டன் டேவிட் ஓவோரி தெருவில் ரௌடிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கம்பாலா பகுதியில் பிறந்த இவர், உகாண்டா பிரிமீயர் லீக்கில் எஸ்சி வில்லா அணியில் மிட் ஃபீல்டராகவும் கேப்டனாகவும் விளையாடி வந்தார்.

இவர் வீட்டில் இருந்தபோது, திருடர்கள் அவரது செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். அப்போது நடந்த மோதலில் டேவிட் ஓவோரி அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மறைவுக்கு உகாண்டாவின் தேசிய கால்பந்து அணி இரங்கல் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved