முதல் வெற்றி : மும்பையில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதலாவது போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை சேர்த்தது. அபிஷேக் சர்மாவும், துபேவும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 84 ரன்களை குவித்தார். 162 ரன்கள் இலக்குடன் ஆடிய அமெரிக்க அணியில், வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி தோல்வி அடைந்தது. Related Link கென் கருணாஸின் ’யூத்’ திரைப்பட பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு