Also Watch
Read this
By: Manigandan Raja

ரொனால்டோ சகோதரி காட்டியா அவிரோ பகிர்ந்த தகவல் :
தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடருடன் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக அவரது சகோதரி காட்டியா அவிரோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர்ச்சுகல் தேசிய அணியுடன் ரொனால்டோ விளையாடும் கடைசி உலகக் கோப்பைத் தொடர் இதுவாகத்தான் இருக்கும் என்றார்.
பெனால்டி ஷூட் அவுட்டில் எகிப்து வெற்றி :

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு எகிப்து அணி தகுதி பெற்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் 2க்கு 4 என்ற கோல் கணக்கில் எகிப்திடம் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியா - இங்கிலாந்து 2வது டி20 போட்டி :
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று Stretford நகரில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டி மழையால் முடிவின்றி ரத்து செய்யப்பட்டதால், இன்றைய போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.