news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் இடம் பெறாத வைபவ்?
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் இடம் பெறாத வைபவ்?

வைபவ் சூர்யவன்ஷி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் எப்போது களமிறங்குவார் என விவாதம் வேண்டாம் :

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின் முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படாதது இணையத்தில் மீண்டும் பேசுபொருளான நிலையில், வைபவ் எப்போது களமிறங்குவார் என்பதை பற்றி கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா கேட்டுக் கொண்டுள்ளார்.

15 வயதிலேயே இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், வைபவ் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலும், தினமும் மூத்த வீரர்களுடன் பயிற்சி செய்வது, சிறந்த பயிற்சியாளர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறுவது அவரின் எதிர்காலத்திற்கு நல்லது எனவும் கருத்து தெரிவித்தார்.

இந்தியா-இங்கிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் :

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி ப்ரூக் தலைமையிலான அணியில், ஆர்ச்சர், பெத்தல், பட்லர், சாம் கரண், வில் ஜேக்ஸ், ஜோ ரூட், பென் டக்கெட் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 14ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 16ஆம் தேதியும், மூன்றாவது போட்டி 19ஆம் தேதியும் நடைபெறுகிறது.

முதல் சுற்றில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி :

குரோஷியா நாட்டில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் தொடரின் ரேபிட் பிரிவு போட்டியின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரம் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். ஜெர்மனியின் வின்செண்ட் கீமரை எதிர்கொண்ட கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, வெள்ளை நிற காய்களுடன் 23ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதேபோன்று இரண்டாவது சுற்றில் பிரான்சின் மேக்சிக் மற்றும் மூன்றாவது சுற்றில் சொந்த நாட்டைச் சேர்ந்த குகேஷ் உடனான போட்டியை பிரக்ஞானந்தா டிரா செய்தார்.


Related Link
உலக கோப்பை தொடரில் வெளியேறிய ஜெர்மனி

உலக கோப்பை தொடரில் வெளியேறிய ஜெர்மனி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் என கூறப்படும் மூவர் கைது

0
0 min agoshare
கொலை மிரட்டல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau