Also Watch
Read this

கோவை, நீலகிரி, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி...
இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;
சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. 3ஆம் தேதி, வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, 4ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 3 நாளில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடையக்கூடும்.

ஜூலை 04
கோயம்புத்தூர்
நீலகிரி
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
ஜூலை 05
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

ஜூலை 06, 07
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பம் குறையும்
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, ஆனாலும் சற்று குறையக்கூடும்.

சென்னையில்...
வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்க கடல் பகுதி, ஆந்திர கடலோர பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதிகள், கேரள - கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளில், அதிக பட்சமாக 60 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசும் என்பதால், வரும் 8ஆம் தேதி வரை, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.