Also Watch
Read this
By: Manigandan Raja

செப்டம்பர் வரை எல் நினோவின் தாக்கம் அதிகரிக்கும் :
ஜூலை முதல் செப்டம்பர் வரை எல் நினோவின் தாக்கம் அதிகரித்து பெரிய அளவில் வானிலை மாற்றம் ஏற்படும் என உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் வானிலை மற்றும் காலநிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உருவாகியுள்ள எல் நினோ, தீவிரமாக வலுப்பெற்று பல மாதங்கள் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து :

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா((Khyber Pakhtunkhwa's)) மாகாணத்தில் மலை பள்ளத்தாக்கு ஒன்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் என 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். க்யூட்டா((Quetta)) பகுதியிலிருந்து பெஷாவருக்கு((Peshawar)) சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்து பேருந்தின் பிரேக் பழுதாகி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
பெற்றோரின் சரக்கு வேனை எடுத்து ஓட்டிய சிறுவன் புத்த துறவிகள் மீது மோதி விபத்து :

தாய்லாந்தில் பெற்றோரின் சரக்கு வேனை எடுத்து ஓட்டிய சிறுவன், சாலையில் வரிசையாக நடந்து சென்ற புத்த துறவிகள் மீது அசுர வேகத்தில் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதில், ஒன்பது புத்த துறவிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.